ராஜகுமாரியின் சுயம்வரம்-38

ராஜகுமாரியின் சுயம்வரம்-38


பாட்டி கதையை முடிக்க பாட்டியின் மூத்த மருமக சொன்னாள் "என்னதான் மகாராணியாக இருந்தாலும் அவளும் ஒரு தாய் தானே ?
அது எப்படி?,எட்ட நின்று பார்த்துத்து விட்டுப்  போவதாய் சொல்வது. ஒரு வேளை அவங்க போருக்கு எல்லாம் .போவதால் பாசம் குறைவோ?"என்றாள். 

குறுக்கே போய் சின்ன மருமகன் , "அதுதானே  என் பொண்டாட்டிக்கு மூளை அதிகம்.எப்படி கண்டுபிடித்தாள்,பார்த்திங்களா? அண்ணி "என்றான் .அவளோட புருசன்.

எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது. சின்ன மருமகள் மட்டும் கோபத்தின் உச்சத்தில்  நின்றாள் ."இங்க பாருங்க. உங்களை நான் கண்டிப்பா செடிகொடிக்கு உரமாக்கிடுவேன் பாருங்க. "என்று திட்டினாள்.  

அப்போது அவ புருசன் .
"அய்யய்யோ" என்று கத்தி விட்டு சொன்னான்  "நீங்க எல்லாரும் சாக்கி. அவள் கூறியதை நன்றாக கேட்டுக்கொண்டு  விட்டீர்கள் தானே?"என்று கூறியவன் "நான் வெளியூர் வேலைக்குப் போனாலும். மூன்று நாட்களுக்கு மேல் தங்கியதில்லை .அதனால் அதற்கு மேல் என்னைக் காணவில்லை என்றால் வீட்டுக்குப் பின் புறமாக இருக்கும் மரங்களைத் தோண்டிப் பாருங்க பா .இப்படி கொலை வெறியோடு பேசுகிறாளே?" எனக் கூறி சிரித்தான். 

கூடவே சேர்ந்து பாட்டியும் சிரித்தார். அப்போது லூசியா போன் மணி ஒலித்தது. லூசியா திருட்டு முழி முழிச்சாள் . என்ன? போன் யாரு?
அது" என்று மேரி கேட்க எல்லோரும் லூசியாவைப் பார்க்க .அவள் உளற ஆரம்பித்தாள் .

"அது ----தோழி இல்லை இல்லை ஏதோ ரோங் நம்பர் போல.தெரியாத நம்பர் மாதிரி  இருக்கு. தெரிஞ்ச நம்பர் போலும் இருக்கு .
யாரோ ஞாபகம் இல்லை ."என்று உளறும் போதே போன் கட்டாச்சு. அப்பாட என்றவள் போனைப் பார்த்தவாறே இருந்தாள்.

ரிஸ்வின் போன் எடுத்து இருப்பான். வேறு எண்ணில் இருந்து .என்ற ஞாபகம்  அவளுக்கு . ஆனால் அது அவன் இல்லை .
என்பது அவளுக்குத்  தெரியல .

மீண்டும் அதே ஒலி கொடுத்தது போன். உடனே லூசியா கையில் இருந்த போனை.வாங்கி "ஹலோ" என்றாள் மேரி அக்கா. 

"வணக்கம் அக்கா நான் யார்? என்று தெரிகிறதா?" என்றது ஆண் குரல் ஒன்று .  மேரி அக்கா சொன்னார் "போனில் குரல் தான் கேட்கிறது. முகம் தெரியல நீங்க சொல்லுங்க .யார்? என்பதை" எனக் கொஞ்சம் கேலியும் கோபமுமாகக் கூறினாள் .

"யாரடி? அது"என்றார் பாட்டி 
"ஆண் குரல் பாட்டி"என பதில் கொடுத்தாள் மேரி அக்கா. 

கேட்ட நொடியே லூசியா இதயத்தில் தண்ணீர் இல்லை .பயந்தே போனாள்  .அப்போது அந்த ஆண் குரல் சிரித்து விட்டுக் கூறியது. "அக்கா  எனக்கு பெரியம்மாட்ட திட்டு வாங்கி தாராதீங்க .நான் தான் வேண்காரப் பையன் றியாஸ்."என தன்னை அறிமுகம் செய்தான். 

"லூசியா  தங்கையிடம் நம்பர் வாங்கினேன். பேசவே இல்லை .இப்போது  எல்லோருமே  இருப்பிங்க என்று தெரிந்து தான் .
எடுத்தேன்" என்றான் .

"அட போங்க தம்பி நல்லா திட்டி இருப்பேன் .தப்பித்திங்க என்று சொல்லி சிரித்தாள்  மேரி அக்கா.  சிரி போனை அவுட்டாக்கி வையுங்கள் .எல்லோரும் "பேசட்டும் என்றான் .

பாட்டியின் கையில் போனை கொடுத்தாள் மேரி. . அப்போதுதான் லூசியாவுக்கு மூச்சே வந்தது. இனி எல்லோரும் கேலியும் கிண்டலுமாய் அவனோடு பேசி முடித்து விட்டு தூக்கத்துக்குத் தயாரானார்கள் .

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post