வெறும் 7 ரன்ஸ்.. மிரட்டிய தெ.ஆ.. அடங்க மறுத்த இந்தியா.. 10 வருட வேதனையை உடைத்து பிரம்மாண்ட சாதனை

வெறும் 7 ரன்ஸ்.. மிரட்டிய தெ.ஆ.. அடங்க மறுத்த இந்தியா.. 10 வருட வேதனையை உடைத்து பிரம்மாண்ட சாதனை


ஐசிசி 2024 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற  இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ரோஹித் சர்மா 9, ரிஷப் பண்ட் 0, சூரியகுமார் யாதவ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். 

அதனால் 34/3 ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு அடுத்ததாக வந்த அக்சர் படேல் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி நிதானமாக விளையாடினார். அந்த வகையில் 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்த இந்த ஜோடியில் அக்சர் படேல் 47 (31) ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய விராட் கோலி முக்கிய நேரத்தில் அரை சதமடித்து 76 (59) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சிவம் துபே அதிரடியாக 27 (16) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இந்தியா 176/7 ரன்கள் குவித்தது.  தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக தலா மகாராஜ் 2, அன்றிச் நோர்ட்ஜே விக்கெட்டுகள் எடுத்தனர். 

அதைத் தொடர்ந்து 177 ரன்கள் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் 4 ரன்களில் பும்ரா வேகத்தில் போல்ட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 4 ரன்னில் அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானதால் 12/2 என தென்னாபிரிக்க ஆரம்பத்திலேயே தடுமாறியாது. ஆனால் அப்போது டீ காக் – ட்ரிஷன் ஸ்டப்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.

அதில் ஸ்டப்ஸ் 31 (21) ரன்களில் அக்சர் படேல் சுழலில் போல்ட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த ஹென்றிச் கிளாசின் தம்முடைய ஸ்டைலில் அடித்து நொறுக்கினார். அவருடன் எதிர்புறம் விளையாடிய டீ காக் 39 (31) ரன்னில் அவுட்டானாலும் அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் அதிரடி காட்டியதால் இந்தியாவின் கையை விட்டு கிட்டத்தட்ட நழுவியது. ஆனால் இந்த ஜோடியில் கிளாசின் அரை சதமடித்து முக்கிய நேரத்தில் 52 (27) ரன்களில் பாண்டியா வேகத்தில் ஆட்டமிழந்தது திருப்பு முனையாக அமைந்தது. 

ஏனெனில் அதை பயன்படுத்திய பும்ரா 18வது ஓவரில் 2 ரன்கள் மட்டும் கொடுத்து மார்கோ யான்சென் விக்கெட்டை எடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார். அதை அர்ஷ்தீப் சிங் 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து அழுத்தத்தை அதிகரித்தார். அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்திலேயே டேவிட் மில்லரை 21 ரன்களில் சூர்யாகுமாரின் அபார கேட்ச்சால் பாண்டியா அவுட்டாக்கினார்.

அதோடு நிற்காத அவர் அடுத்து வந்த ரபாடாவையும் 4 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் 20 ஓவரில் தென்னாபிரிக்காவை 169/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய  இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது.

குறிப்பாக 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து உலகின் புதிய டி20 சாம்பியனாக சாதனை படைத்த  இந்தியா 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வந்த வேதனை தோல்விகளை உடைத்து சாதனை படைத்துள்ளது. இதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையை 2 முறை வென்ற முதல் ஆசிய அணி என்ற பிரம்மாண்ட வரலாற்றையும் இந்தியா படைத்தது.

crictamil


 



1 Comments

  1. வெற்றி வாழ்த்துகள்

    ReplyDelete
Previous Post Next Post