வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-46

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-46


226. வினா : தன்னை காக்க என்ன செய்ய வேண்டும்?
விடை: கோபம் வராமல் காக்க வேண்டும் 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்.(305)

227. வினா : சினம் எதனை அழிக்கும்?
விடை : தன்னைச் சார்ந்தவரையும், தன் இனத்தையும்
சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.(306)

228. வினா : நினைத்தது எல்லாம் பெறுவது எப்போது?
விடை: மனதில் சினம் கொள்ளாத நிலையில் 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்.(309)

229. வினா : இறந்தவர்க்கு நிகரானவர் யார்?
விடை: அளவற்ற சினம் கொள்பவர் 
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (310)

230. வினா : துன்பம் செய்தாரை எவ்வாறு தண்டித்தல் வேண்டும்?
விடை : அவர்களே  வெட்கப்படும்படி நன்மை செய்வதன் மூலம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.(314)

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post