வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-47

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-47


231. வினா : துன்பம் செய்தாரை எவ்வாறு தண்டித்தல் வேண்டும்?
விடை : அவர்களே வெட்கப்படும்படி  நன்மை செய்வதன் மூலம் 
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.(314)

232. வினா : அறிவினால் ஆகும் பயன் யாது?
விடை: பிறர் துன்பத்தையும் தன் துன்பமாகக் கருதுதல் 
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை.(315)

233. வினா : பிற்பகல் தாமே வரும் எது?
விடை : முற்பகல் நாம் செய்த தீங்கு 
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்.(319)

234. வினா : துன்பம் எல்லாம் யாரை வந்தடையும்?
விடை: துன்பம் செய்தவரையே துன்பம் வந்தடையும் 
நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்.(320)

235. வினா : அறவினை என்பது யாது?
விடை : கொல்லாமை
அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்.(321)

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post