நிலவின் தென்துருவத்திலிருந்து மண்-பாறை மாதிரிகளைக் கொண்டு வருவதற்காக சாங் இ-6 என்ற விண்கலத்தைச் சீனா அனுப்பியது.
இந்த விண்கலம் கடந்த 2-ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது.
நிலவின் தென் துருவத்தில் எய்ட்கென் படுகையில் தரை இறங்கிய விண்கலம், இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவி மூலம் நிலவின் மண், பாறை மாதிரிகளை சேகரித்தது.
மேலும் நிலவு மேற்பரப்பின் சில புகைப்படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்பியது.
பின்னர் அந்த மாதிரிகள் நிலவைச் சுற்றி வந்த லேண்டருக்கு மாற்றப்பட்டு பூமிக்குப் புறப்பட்டது.
இந்நிலையில் நிலவின் மண்-பாறை மாதிரிகளுடன் சாங் இ-6 என்ற விண்கலம் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரை இறங்கியுள்ளது.
சுமார் இரண்டு மாத நீண்டப் பயணத்திற்குப் பிறகு, இப்பணி நிறைவடைந்துள்ளது என்று சீனா தெரிவித்தது.
விண்கலத்திலிருந்த நிலவின் மாதிரிகளை விஞ்ஞானிகள் எடுத்து ஆய்வு கூடத்திற்கு கொண்டு சென்றனர்.
கிரகங்கள் உருவானது குறித்தும், அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என்றனர்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments