திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -53

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -53


குறள் 1257
நாணென ஒன்றோ அறியலம் 
காமத்தால் பேணியார் பெட்ப செயின்.

நட்புத்தோழி நளினிக்கும் 
எனக்கும் அய்ந்துவயது வேறுபாடு 
மாலையில் வந்தாள்! 
அருகில்அமர்ந்தாள், சிரித்தாள், 
ஆடினாள், 
பள்ளியில் நடந்ததைப் பற்றி 
பேசினாள்! 
என்னைத் தொட்டாள்! 
கிள்ளினாள்! செல்லமாக அடித்தாள்! 
பழுப்புகாட்டினாள்!
அனைத்தையும் மெய்மறந்து 
ரசித்தேன்! அனுமதித்தேன்! 
நட்புத் தோழி எனக்கு 
விருப்பமானவற்றைச் செய்யும் 
பொழுது 
நட்புரிமையில் தடைசொல்வதில்லை! 
சூழ்நிலையும் மறந்துபோகும்!

குறள் 1258
பன்மாயக் கள்வன் பணிமொழி 
அன்றோநம் பெண்மை உடைக்கும் படை.

என்தோழி மல்லிகை இருக்காளே 
சின்ன பொண்ணுதான்!
ஆனா அவ கண்ண உருட்டி உருட்டிப்பேசுவா
 பாரு அம்மா! அப்படியே உருகிருவோம்! 
சொல்லால மயக்கிருவா!
 என்னுடைய மனஉறுதியவே 
தகர்த்துருவா !
அவளுடைய படைக்கலனா இருக்குறதே 
அவளுக்கே உரித்தான 
கொஞ்சுமொழிதான்.

குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் 
நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு.

என்தோழி யாழினி 
என்ன நெனச்சுக்குட்டு இருக்கா? 
அஞ்சு நாளா கண்டுக்கவே இல்ல! 
உண்டு இல்லனு ஆக்கணுந்தான்
போனேன்! 
ஆனால் இந்தப்பாழும் 
மனசு இருக்கே 
அவளோட பேசுபேசுன்னு 
கிட்டகிட்ட போகுது! 
நானும் என் 
கோபத்தை 
பிடிவாதத்த தூக்கி 
எறிஞ்சிட்டு 
அவள கட்டிப்பிடிச்சு 
பேச ஆரம்பிச்சுட்டேன்! 
எல்லாத்தயும் மறந்துட்டேன்!

குறள் 1260
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு 
உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்.

தோழி கலைமதி 
சிறியவள்தான்! 
எப்படா பேசுவாள் 
என்றிருந்தேன்! 
பேசினோம்! மகிழ்ந்தோம்! 
ஒருவழியாக நட்புக்கோபம் 
தீர்ந்தது!
நெருப்பிலிட்ட கொழுப்பைப்போல் 
உருகும் இளகிய மனம்கொண்ட 
என்னைப் போன்றோர்கள் 
சேர்ந்ததற்குப்பின் 
மீண்டும் விலகிகோபம் 
கொள்வது இயலாது!
உறுதியாகவும் அதில் 
இருக்கமுடியாது!

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post