
எதிர்வரும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி வேட்டை 10 வருடத்தை எட்டுகின்றது.கடந்து வந்த ஒன்பது வருட காலத்தில் வேட்டை பல புதுமைகளை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.அதில் முக்கியமாக Ai தொழில்நுட்பத்தை சொல்லலாம்.
உலகில் முதன் முதலாக Ai தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தமிழ் பத்திரிகை என்ற பெருமை வேட்டை என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவிக்கின்றோம
Ai(தமிழ்,ஆங்கில)செய்திகள்,AI கதைகள்,AI கவிதைகள், AIகட்டுரைகள்,AIபாடல்கள் மற்றும் AIநேர்காணல் என்று நவீன தொழில் நுட்பத்தை தமிழ் இலக்கியத்தோடு பயன் படுத்திய பெருமை வேட்டைக்குண்டு.இந்த சாதனைகளின் வரிசையில் தற்போது AIஅனிமேஷன் குறும் படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
https://vettaigalhinna.blogspot.com/search/label/AI%20SONGS
அனிமேசன் குறும்படத்தின் தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
வேட்டையில் வெளியாகி வாசகர்களின் அமோக ஆதரவைப்பெற்ற "கல்ஹின்னை மாஸ்டர் "எழுதிய "கன்னத்தில் முத்தமிட்டாள்" என்ற சிறுகதையை தழுவி இந்த குறும்படம் தயாரிக்கப்படுகின்றது.
இந்த குறும்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன.அதில் முதல் பாடலை இன்று வெளியிடுகின்றதில் பெருமையடைகின்றோம்.
இரண்டாவது பாடலும் விரைவில் வெளியிடப்படும்.மூன்றாவது பாடல் ஆகஸ்ட் 27ஆம் திகதி,(வேட்டையின் 10வது வருடத்தில் ) குறும்படத்தோடு வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முதல் பாடலுக்காக வேட்டையோடு கைகோர்த்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .முக்கியமாக RTV RIYAS(NETHARLAND),கீர்த்திகா பாலகிருஷ்ணன் (HOLAND)ஆகியோருக்கு வேட்டை வாசகர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முதல் பாடல் RTV RIYAS அவர்கள் பாடியது.AI தொழில்நுட்பத்தின் மூலம் , RIYAS அவர்களையும், சகோதரி கீர்த்திகாவையும்
AIமூலம் இணைத்து ,நடிக்க வைத்து பாட்டுக்கு மேலும் மெருகூட்டி இருக்கின்றோம்.
நன்றி
வேட்டை
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
2 Comments
கன்னத்தில் முத்தமிட்டாள் குறும்படப் பாடல் அருமை. பாடலாசிரியருக்கும் பாடியவர்களுக்கும் நடித்தவர்களுக்கும் வாழ்த்துகள். பாடல் பரவசம்! நடிப்பு அருமை! பாடகரின் குரலின் ஏற்றத் தாழ்வுகள் அற்புதம்! பல நாடுகளின் கூட்டுறவுப் பறவைகளால் ஆன கன்னத்தில் முத்தமிட்டாள் குறும்படத்திற்கு வாழ்த்துகள். கண்கவரும் பின்னணிக் காட்சிகள் வியக்க வைக்கின்றன.
ReplyDeleteமதுரை பாபாராஜ்
வேட்டை இதழ் வாழ்க!
ReplyDeleteஆசிரியர் திரு காலிட்!
ஆகத்து 27 ஆம் நாள் 10 ஆம் ஆண்டு!
ஆண்டுகள் பத்தில் நடைபோடும் நற்றமிழ்
வேட்டை இதழை இதயத்தால் வாழ்த்துகிறேன்!
பன்நாட்டில் வாழும் படைப்பாளி ஆற்றலை
நன்முறையில் இங்கே வெளிக்கொணரும் வாய்ப்புகளைத்
தந்தேதான் ஊக்குவிக்கும் அன்பினை வாழ்த்துகிறேன்!
வண்டமிழ்த் தொண்டினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்