Ticker

6/recent/ticker-posts

Ad Code



கனேடிய பாடசாலை மீது துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் விடுத்த சிறுமி

கனடாவிலுள்ள(Canada) பாடசாலை ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி ஒருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் அஜாக்ஸில் அமைந்துள்ள பேராயர் டெனிஸ் ஓகானர் கத்தோலிக்க உயர்நிலைப் பாடசாலை மீதே துப்பாக்கிச் சூடு நடத்துவதாக சிறுமி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்போது, 15 வயதுடைய சிறுமி ஒருவரே ஸ்னாப்சாட் இடுகை ஒன்றின் மூலம் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமியின் வீட்டை சோதனையிட்ட போது, ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments