Ticker

6/recent/ticker-posts

மெகா சுனாமி எத்தனை நாள் நீடிக்கும்? 9 நாட்கள் நீடித்த மிகவும் நீள.....மான சுனாமி ராட்சத அலைகள்...


சுனாமி என்ற வார்த்தையே அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும். ஒரு சில மணி நேரம் கிடுகிடுக்க வைத்து பெருத்த சுனாமி இந்தியாவை உலுக்கி 20 ஆண்டுகள் ஆனாலும், அதன் தாக்கத்தையும் வேதனையையும் இன்னமும் மறந்துவிட முடியாது. ஆனால், அண்மையில் வந்த ஒரு சுனாமி, ஒன்பது நாட்கள் நீடித்தது என்றால் அதன் தீவிரமும் பயங்கரமும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஒன்பது நாட்கள் நீடித்த சுனாமி கடந்த ஆண்டு (2023) கிரீன்லாந்தில் ஏற்பட்டது. ஒரு மலையின் சிகரம் கடலில் சரிந்ததால், சுமார் 200 மீட்டர் அதாவது 650 அடி உயரத்தில் சுனாமி அலைகள் எழுந்தன. இந்த மெகா சுனாமியின் ராட்சத அலை மிகவும் வலுவாக இருந்தது.

இந்த பிரம்மாண்டமான சுனாமி அலைகள், நிலப்பகுதியையும் அதிரச்செய்தது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நீடித்த சுனாமியைப் பற்றிய தகவல்கள் இப்போது பிரபலமாக பேசப்படுகிறது.

மெகா சுனாமி

2023 இல் ஒரு மர்மமான நில அதிர்வு சமிக்ஞைகள் பதிவாகின. விஞ்ஞானிகளுக்கு இப்படி நில அதிர்வுகள் ஏன் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடியவில்லை. பூகம்பங்களின் பொதுவான அதிர்வெண்ணுக்கு பதிலாக,  ஒரே ஒரு அதிர்வு அதிர்வெண்ணுடன் ஒரே மாதிரியான ஓசை மட்டுமே வந்ததை விஞ்ஞானிகள் அவதானித்தனர்.

இதுபோன்ற விஷயங்கள் அறிவியலுக்கு சவால் விடுவதாக இருந்தாலும், அவை பல உண்மைகளை வெளிக்கொணரும். எனவே, சர்வதேச விஞ்ஞானிகள் குழு, இந்த மர்மத்தை தீர்க்க முடிவு செய்தது. தொடர்ந்த ஆய்வுகளின் இறுதியில், ஏற்பட்ட வித்தியாசமான நில அதிர்வு சமிக்ஞைகளுக்குக் காரணம், கிரீன்லாந்தில் ஏற்பட்ட சுனாமி அலைகள் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது தொடர்பான அறிவியல் சஞ்சிகையான journal Science என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 15 நாடுகளில் உள்ள 40 நிறுவனங்களைச் சேர்ந்த 66 விஞ்ஞானிகள் இணைந்து செயல்பட்டனர். இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் முதன்மையானவர், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வின் (GEUS) புவியியலாளர் கிறிஸ்டியன் ஸ்வென்னெவிக்.

அவரது கருத்துப்படி, மிகப் பெரிய சர்வதேச முயற்சியின் மூலம் மட்டுமே மர்மத்தை தீர்க்க முடிந்தது. மேலும், 10,000 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களை நிரப்பக்கூடிய பாறை மற்றும் பனிக்கட்டிகள் விழுந்ததில் 200 மீட்டர் உயரத்தில் ஒரு மெகா-சுனாமி தூண்டப்பட்டது என்று தெரிவித்தார்.

சிச்சே (seiche) என்பது ஒரு பனிக்கட்டி முன்னும் பின்னுமாக அலைந்து கொண்டே இருக்கும் நிகழ்வாகும், இதுவும் இந்த சுனாமியின் போது இணைந்து கொண்டது. ஒன்பது நாட்களில் சுமார் 10,000 முறை உலுக்கிய இந்த மெகா சுனாமி, 1980 முதல் பூமியில் பதிவு செய்யப்பட்ட மிக உயரமான அலை ஆகும்.

2004 இல் இந்தோனேசியாவிலும், 2011 இல் ஜப்பானிலும் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளை விட பல மடங்கு அதிகமாகும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மெகா சுனாமிக்கு காரணம் என்ன?

காலநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் ஆகியவையே இப்படிப்பட்ட சுனாமிகளுக்கு காரணமாகிறது. பனிப்பாறை காலநிலை மாற்றத்தால் சிறிதாகிவிட்டதால், மேலே உயர்ந்து நிற்கும் மலையை தாங்க முடியாத நிலை வந்தபோது அது நொறுங்கிவிட்டது. நொறுங்கிய மலையின் சிகரம் உயரத்தில் இருந்து விழுந்ததால் இந்த அபூர்வ சுனாமி ஏற்பட்டிருக்கிறது.

இனிமேல் இதுபோன்ற மெகா சுனாமி நிகழ்வுகள் அடிக்கடி மற்றும் பெரிய அளவில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் என விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர்

zeenews



 Ai SONGS

 



Post a Comment

0 Comments