தொழில்நுட்ப துறையை உலுக்கிய ஒரு மிகப்பெரிய நடவடிக்கையில், ரஷ்யா கூகுள் நிறுவனத்திற்கு 20 டெசிலியன் அதாவது 20,000,000,000,000,000,000,000,000,000,000,000 என்ற பிரம்மாண்டமான அபராதத்தை விதித்துள்ளது.
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலளிக்கும் விதமாக கூகுள் தாய் நிறுவனமான அல்பாட்டிற்கு சொந்தமான யூ டியூப்பில் ரஷ்ய அரசு நடத்தும் பல ஊடக சேனல்களைத் தடை செய்யும் முடிவுக்காக இந்த தனித்துவமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நீதிமன்றம், யூ டியூப்பில் ரஷ்ய அரசு ஆதரவு ஊடக அமைப்புகளின் சேனல்களை நீக்கியதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக தீர்ப்பளித்துள்ளது.
மேலும், இந்த அபராதத்துடன், ஒன்பது மாதங்களுக்குள் இந்த சேனல்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவும் உள்ளது.
அவ்வாறு இணங்கத் தவறும் பட்சத்தில் தண்டனை தினமும் இரட்டிப்பாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வன்முறையான நிகழ்வுகளை மறுப்பது, குறைத்தல் அல்லது சிறப்பியல்பற்றதாக ஆக்குவது போன்ற உள்ளடக்கக் கொள்கைகளை மேற்கோள் காட்டி யூ டியூப்பின் இந்தத் தடையை கூகுள் நியாயப்படுத்தியது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments