Ticker

6/recent/ticker-posts

"குப்பைகள் நிரம்பிய பலூன்களைத் தென்கொரியாவுக்கு அனுப்புவதை நிறுத்துவோம்" - வடகொரியா


வடகொரியா குப்பைகள் நிரம்பிய பலூன்களைத் தென்கொரிய எல்லைக்குள் அனுப்புவதை நிறுத்தப்போவதாகக் கூறியுள்ளது.

தனக்கு எதிரான துண்டுப் பிரதிகளையும் K-pop இசைக் காணொளிகளையும் தனது எல்லைக்கு அனுப்புவதைத் தென்கொரியா நிறுத்தவேண்டும்.

அப்படி நிறுத்தாவிட்டால் மீண்டும் குப்பைகள் நிரம்பிய பலூன்கள் அனுப்பப்படும் என்று வடகொரியா எச்சரித்தது.

வடகொரியாவின் எரிச்சலூட்டும் செயலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று தென்கொரியா கூறியது.

வடகொரியாவுக்கு எதிரான பிரசாரங்களைப் பெரிய ஒலிபெருக்கிகள் மூலம் பியோங்யாங்கை (Pyongyang) நோக்கித் தென்கொரியா ஒலிபரப்பவிருக்கிறது.

அத்தகைய செயல் 2018ஆம் ஆண்டில் இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற உச்சநிலைச் சந்திப்புக்குப் பின் நிறுத்தப்பட்டது.

வார இறுதியில் வடகொரியா 700க்கும் அதிகமான குப்பைகள் நிரம்பிய பலூன்களைத் தென்கொரியாவுக்கு அனுப்பியது.

அவற்றில் 15 டன் கழிவுகளும் குப்பைகளும் இருந்தன.

தென்கொரிய அதிகாரிகள் பலூன்கள் விழுந்த இடங்களை அடையாளங்கண்டு அவற்றை அப்புறப்படுத்திவருகின்றனர்.

seithi


 



Post a Comment

0 Comments