இந்த நாட்டில் ஜீன்ஸ், மஞ்சள் டிரஸ் போடக்கூடாது.. சமோசா சாப்பிட இந்த நாட்டில் தடை.. என்னங்க சொல்றீங்க..

இந்த நாட்டில் ஜீன்ஸ், மஞ்சள் டிரஸ் போடக்கூடாது.. சமோசா சாப்பிட இந்த நாட்டில் தடை.. என்னங்க சொல்றீங்க..

சில நாடுகளில் சமோசா, கெட்ச்அப் சாப்பிடக்கூடாது. இன்னும் சில நாடுகளில் நீல நிற ஜீன்ஸ், மஞ்சள் உடை அணியக்கூடாது என வித்தியாசமான விதிகள் உள்ளன. சில நாடுகளில் விசித்திரமான விதிகள் இன்றளவும் உள்ளன. இதனைப் பற்றி நீங்களும் அறிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

சிங்கப்பூரில் சூயிங்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. 1992 ஆம் ஆண்டில், ஒரு நபர் தனது காரில் சூயிங் கம் மாட்டிக்கொண்டார். இது பல மணிநேர போக்குவரத்து சேவைகளை நிறுத்தியது. அப்போது மக்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அப்போதிருந்து, சூயிங்கம் தடைசெய்யப்பட்டுள்ளது.

கிரீஸில் வீடியோ கேம்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்த நாட்டில் வீடியோ கேம்கள் மட்டுமின்றி எல்லாவித கணினி கேம்களும் தடை செய்யப்பட்டுள்ளன. 2002 இல், கிரேக்கத்தில் வீடியோ கேம்களை தடை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிய அனுமதி இல்லை. நீல நிறம் என்றால் அமெரிக்காவை நினைவூட்டுவதாக, எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்கள்.

மலேசிய அரசாங்கம் அந்த நாட்டில் மஞ்சள் நிறத்தை தடை செய்துள்ளது. 2015ஆம் ஆண்டு மலேசியப் பிரதமருக்கு எதிராக மக்கள் மஞ்சள் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். இதை கட்டுப்படுத்த அரசு இடங்களில் மஞ்சள் ஆடை அணிய அரசு தடை விதித்துள்ளது.

சோமாலியாவில் சமோசா தடைசெய்யப்பட்டுள்ளது. சன்னி இஸ்லாமிய ராணுவம் மற்றும் அரசியல் கட்சியான அல் ஷபாப், தனது நாட்டில் சமோசா தயாரிப்பதற்கும், சாப்பிடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. சமோசாவின் வடிவம் சோமாலியா நாட்டிற்கு எதிராக இருப்பதால் இச்சட்டம் வைக்கப்பட்டுள்ளது.

asianetnews


 



Post a Comment

Previous Post Next Post