Ticker

6/recent/ticker-posts

Ad Code



கேரளா இனி கேரளம் ஆகிறது…


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் “கேரளம்” என்று அழைக்கப்பட வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தற்கமைய, அதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் மற்றும் கருவூல துறை இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் ஒருமனதாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. அப்போது தொழில்நுட்ப காரணத்திற்கான தடைப்பட்டதால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது.

“மொழி அடிப்படையில் கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மாநிலங்கள் உருவாகின. அதனடிப்படையில் கேரளா மாநிலம் உருவான தினம் நவம்பர் முதலாம் திகதியாகும். தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகங்களுக்கு ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டிருந்தது.

இதனால் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3-ன் கீழ் மாநிலத்தின் பெயரை கேரளம் எனத் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும், அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும்” கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

lankatruth


 



Post a Comment

0 Comments