கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள் :வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள் :வெளியான அதிர்ச்சி தகவல்


கனடாவில் (Canada)  போதை மருந்து பயன்பாட்டினால் அதிகளவிலான இளம் வயதினர் உயிரிழந்து வருவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ரொறன்டோ (Toronto)  மாகாணத்திலேயே அதிகளவு மரணங்கள் பதிவாகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக கொரோனா தொற்று காலத்தின் பின்னரே மரணங்கள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் ரொறன்டோ நகரில் 523 பேர் மிதமிஞ்சிய அளவில் போதை மருந்து பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் 25 முதல் 44 வயது வரையிலானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொறன்டோவில் ஆபத்தான போதை மருந்து விநியோகம் அதிகரித்துள்ளதாகவும் இது சட்டவிரோதமான செயல்பாடு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மிதமிஞ்சிய அளவில் போதை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் விபத்துக்கள் காரணமாக அதிக அளவு மரணங்கள் பதிவாவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post