டொலர் - யூரோ பயன்பாட்டை இடைநிறுத்திய ரஷ்யா: அமெரிக்க தடைகளுக்கு பதிலடி

டொலர் - யூரோ பயன்பாட்டை இடைநிறுத்திய ரஷ்யா: அமெரிக்க தடைகளுக்கு பதிலடி


டொலர் மற்றும் யூரோக்களை பயன்படுத்தி வர்த்தகத்தை இடை நிறுத்த ரஷ்யா (Russia) தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்நியச் செலாவணி பரிவர்த்தனைகள், உலோகங்கள் வர்த்தகம், பங்குகள் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றிற்கு நேற்று முதல் (13) டொலர்கள் மற்றும் யூரோக்களை இனி பயன்படுத்த முடியாது என மொஸ்கொ பங்குச் சந்தை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா (America) ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ரஷ்யாவின் மத்திய வங்கி கூறுகையில், "மொஸ்கோ எக்ஸ்சேஞ்ச் குழுவிற்கு எதிராக அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதன் காரணமாக, அமெரிக்க டொலர்கள் மற்றும் யூரோக்களில் குறிப்பிடப்பட்ட கருவிகளின் பரிமாற்ற வர்த்தகம் மற்றும் தீர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது." என குறிப்பிடப்பட்டுள்ளது.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post