Ticker

6/recent/ticker-posts

மகன் வாயில் மிளகாயைத் திணித்து மரணம் ஏற்படுத்திய தந்தைக்குச் சிறை


சிங்கப்பூரில் 4 வயதுச் சிறுவனுக்கு மரணம் விளைவித்த தந்தைக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு ஒழுக்கத்தைச் சொல்லிக்கொடுக்க எண்ணிய தந்தை மிளகாயின் நுனியைச் சிறுவனின் வாயில் திணித்தார்.

அது சிறுவனின் சுவாசக்குழாயில் சிக்கியதால் சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்தான்.

38 வயதுடைய அந்தத் தந்தை, தம்முடைய மனைவி, 4 பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் வசித்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி சம்பவம் நடந்தது.

சிறுவனின் மேல் துர்நாற்றம் வருவதைக் கண்ட தந்தை,
அதைப் பற்றிக் கேட்டப்போது சிறுவன் மலம் கழித்ததை மறுத்தான்.

பொய் சொன்ன மகனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்க நினைத்த தந்தை மிளகாயைப் பையனின் வாயில் திணித்தார்.

தொடர்ந்து மிளகாயைச் சாப்பிடும்படி அவர் சிறுவனைக் கட்டாயப்படுத்தினார். .

சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான்.

அருகே இருந்த மருந்தகத்திற்குத் தந்தை தன் மகனை அழைத்துச் சென்றார்.

சிறுவன் மரணம் அடைந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

seithi


 



Post a Comment

0 Comments