Ticker

6/recent/ticker-posts

டென்மார்க் பிரதமர் மீது தாக்குதல்


டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடரிக்சன் (Mette Frederiksen) தாக்கப்பட்டுள்ளார்.

அந்தச் சம்பவம் தலைநகர் கோபன்ஹேகனில் (Copenhagen) நடந்தது.

அவரைத் தாக்கிய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக BBC செய்தி கூறுகிறது.

46 வயது திருவாட்டி மெட்டே ஃப்ரெடரிக்சன், 2019ஆம் ஆண்டு முதல் டென்மார்க்கின் பிரதமராகப் பொறுப்பு வகிக்கிறார்.

பிரதமரை நோக்கி வேகமாக வந்த அந்த ஆடவர் அவரது தோளை இடித்துத் தள்ளினார். பிரதமர் தடுமாறி விழுந்தார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

விசாரணை நடைபெறுவதால் மேற்கொண்டு விவரங்களை வெளியிட முடியவில்லை என்று காவல்துறை கூறியது.

ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் டென்மார்க் வாக்களிக்க இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

seithi


 



Post a Comment

0 Comments