
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் (Sergei Lavrov), சுவிட்ஸர்லந்தில் நடைபெறவுள்ள உக்ரேன் அமைதி மாநாட்டின் நோக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அந்த மாநாட்டுக்கு மாஸ்கோ அழைக்கப்படவில்லை. காங்கோவுக்குப் (Congo) பயணம் மேற்கொண்டுள்ள திரு லாவ்ரோவ் உக்ரேனிய விவகாரத்தில் ரஷ்யா பங்கேற்காமல் எந்தத் தீர்வும் ஏற்படாது என்றார்.
இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாநாட்டில் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கலந்துகொள்ளவிருக்கிறார்.
மற்ற நாடுகளும் அதில் பங்கேற்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
உக்ரேனிய அதிபர் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது ஷங்ரிலா மாநாட்டில் அவரது வேண்டுகோளை முன்வைத்தார்.
மற்ற நாடுகள் கலந்துகொள்வதைத் தடுக்க முயலும் ரஷ்யாவுக்குச் சீனா உதவுவதாகவும் திரு ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments