
சண்டிகர்: பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு காவல் படை பெண் காவலர் அறைந்தார்.
பாதுகாப்பு சோதனையில் நடைபெற்ற வாக்கு வாதத்தில், பெண் காவலர் கங்கனாவை அறைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா தவறாகக் கூறியதால் பாஜக எம்பி கங்கனா ரனாவத் மீது ஊழியர் திடீரென தாக்கி அறைந்தார்.
பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்தில் பெண் சிஐஎஸ்எஃப் காவலரால் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
குல்விந்தர் கவுர் என அடையாளம் காணப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ரணாவத் கோரினார்.
லோக்சபா தேர்தலில் மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற ரணாவத் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதியம் 3:30 மணியளவில் கங்கனா டெல்லிக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி சிக்கலில் சிக்கும் கங்கனா ரனாவத், சமீபத்தில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து பலரை அவமதிக்கும் வகையில் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
கங்கனாவின் கருத்துக்களால் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த அவர் தனிப்பட்ட முறையில் புண்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குல்விந்தர் கவுர் கங்கனாவை அணுகி கோபத்தில் ஒரு கன்னத்தில் அறைந்தார்.
விவசாயிகளின் போராட்டங்கள் குறித்த கங்கனாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் சண்டிகர் விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments