ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்ற தம்பதி - 10 ஆண்டுகளுக்கு பின் டிஏன்ஏ சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி

ஐவிஎஃப் மூலம் குழந்தை பெற்ற தம்பதி - 10 ஆண்டுகளுக்கு பின் டிஏன்ஏ சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி


திருமணம் செய்து கொண்ட அனைத்து தம்பதியருக்கும் தங்களது குழந்தையை வாரி அணைத்து முத்தமிட வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருக்காது. ஏனெனில், குழந்தைகள் தான் குடும்ப வாழ்க்கையை சொர்க்கத்தில் நிரப்பும் தேவதைகள். எனவே, திருமணம் முடிந்த மறு ஆண்டிலேயே குழந்தையை வரவேற்க தயாராகி விடுகிறார்கள் பல தம்பதிகள். ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழல் மாற்றத்தால் உடனடியாக பலருக்கு குழந்தை பேறு கிடைப்பதில்லை.

உணவுப் பழக்கவழக்கம், வாழ்க்கை மாற்றம் போன்ற பல காரணிகள் குழந்தை பேறு கிடைக்காமல் இருப்பதற்கு கூறப்படும் காரணங்கள். எனவே, நவீன உலகில் பல்வேறு தொழில்நுட்பங்களின் அடிப்படையில் குழந்தைகளை பெற்றெடுத்து தம்பதிகள் மகிழ்கின்றனர். அந்த வகையில், ஐவிஎஃப் மூலம் குழந்தைகளைப் பெற்ற அமெரிக்க தம்பதிக்கு, இந்த மகிழ்ச்சி சோகமாக மாறியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உட்டாவின் சால்ட் லேக் சிட்டி பகுதியைச் சேர்ந்த வான்னர் மற்றும் டோனா ஜான்சன் தம்பதி திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஆனால், மீண்டும் குழந்தையைப் பெற்றெடுக்க முடியாத சூழ்நிலையை தம்பதி எதிர்கொண்டனர். இருப்பினும், கடந்த 2007ஆம் ஆண்டில் ஐவிஎஃப் மூலம் இரண்டாவது குழந்தையைப் பெற முடிவு செய்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 10 ஆண்டுகளுக்குப் பிறகு வான்னரும் டோனாவும் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். ஆனால், இந்த சோதனை முடிவு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

ஏனென்றால், அவர்கள் ஐவிஎஃப் மூலம் பெற்றெடுத்த இரண்டாவது மகனின் தந்தை வான்னர் இல்லை என்பதை அந்த முடிவு காட்டியது. ஆனால், இரண்டு குழந்தைக்கும் தாய் ஒருவரே என்று காட்டியது. இதனால், இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும், சோதனை முடிவுகளில் ஏதேனும் பிழை இருக்கலாம் என நினைத்து மீண்டும் டி.என்.ஏ. சோதனை செய்தனர். அதிலும், தங்களது இரண்டாவது மகனின் உயிரியல் தந்தை வான்னர் இல்லை என்பது உறுதியானது.

ஐவிஎஃப் முறையின்போது, டோனாவின் முட்டை மற்றொரு விந்தணுவால் கருவுற்றிருப்பது தெரிய வந்தது. இதையறிந்து இருவரும் மிகவும் வருத்தம் அடைந்தனர். “இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்தாலும், எங்கள் மகன் மீதான பாசம் மாறவில்லை. விஷயம் பின்னாட்களில் தெரிந்தாலும், இரண்டாவது மகன் தவிக்கவில்லை. மிகவும் பக்குவமாக ஏற்றுக் கொண்டார்” என்று வான்னர் தம்பதி தெரிவித்துள்ளனர்.

news18



 



Post a Comment

Previous Post Next Post