அதானி முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

அதானி முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்


குஜராத்தில் உள்ள அதானி முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில், சந்தேகம் தட்டும் பெட்டிகளை கண்டறிந்தனர்.

சோதனையில், ரூ.110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் போதை மாத்திரைகள் இருந்தது வெளிப்பட்டது. அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், இந்த மாத்திரைகள் சியரா லியோன் மற்றும் நைஜீரியாவுக்கு அனுப்பப்பட இருந்ததும், ராஜ்கோட்டை சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.

குஜராத் அண்மைக்காலமாக போதைப்பொருள் பறிமுதலில் அதிகரித்து வரும் நிகழ்வுகளால், 'போதைப்பொருள் தலைநகரம்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்த போதைப்பொருள்கள் நாடு முழுவதும் பரவுவதாகவும் விமர்சனம் உள்ளது.





 



Post a Comment

Previous Post Next Post