அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் விவாதம் தொடங்குகிறது

அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் விவாதம் தொடங்குகிறது


அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் களமிறங்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸும் அடுத்த மாதம் 10-ஆம் தேதி முதல் விவாதத்தில் ஈடுபடவுள்ளனர்.

இந்த விவாத நிகழ்ச்சியை அமெரிக்க ஒளிவழி ABC அதை ஏற்று நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிரம்ப் மேலும் இரண்டு விவாதங்களுக்கு ஏற்புடைய தேதிகளை முன்வைத்தார்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி, 25ஆம் தேதி ஆகியவற்றிலும் விவாதம் நடத்தலாம் என்று அவர் கூறினார்.

அதற்கு கமலா ஹாரிஸ் இன்னும் பதிலளிக்கவில்லை.

Ipsos எனும் அனைத்துலக ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்தாய்வின் படி கமலா ஹாரிஸுக்கு அதிக ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post