திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-148

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-148


குறள் 285
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

அடுத்தவொ பொருளை களவாங்க நெனச்சு, அவொ எப்படா அசந்து இருப்பாங்கன்னு எதிர்பார்த்து காத்து இருக்கவங்கிட்ட, அருளை நெனச்சு அன்பா நடக்கக் கூடிய கொணம்லாம் இருக்கவே இருக்காது. 

குறள் 286
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர்.

அடுத்தவனை ஏமாத்தி அவன் பொருளை களவாங்கணும்னு நெனைக்க பயலுவொ, அவங்கிட்ட இருக்கதை வச்சு காலத்தை நல்ல படியா ஓட்டணும்னு நெனைக்க மாட்டானுவொ. 

குறள் 287
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

இருக்கதை வச்சு நல்லபடியா வாழ்றதுக்கு உள்ள தெறமை இருக்கவொகிட்ட, திருடணும்ங்கிற கெட்ட புத்தில்லாம் இருக்காது. 

குறள் 288
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்

களவறிந்தார் நெஞ்சில் கரவு.
 
தேவைக்கு ஏத்த மாதிரி வாழ்பவன் மனசுல நீதி நேர்மைல்லாம் நெறைய இருக்கும். ஆனா களவாணிப்பயலுவொ மனசுல சூது வாது நெறைஞ்சு இருக்கும்.

குறள் 290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு.

களவாணிப் பயலுவொளுக்கு உசுரோடு இருக்கது கூட தவறிப் போகும். இந்த கெட்ட கொணம் இல்லாதவொளுக்கு பேரும் புகழும் இருந்துகிட்டே இருக்கும். 

(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post