டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்தியதால் ஐசிசிக்கு ரூ.167 கோடி இழப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்

டி20 உலகக்கோப்பையை அமெரிக்காவில் நடத்தியதால் ஐசிசிக்கு ரூ.167 கோடி இழப்பு... வெளியான அதிர்ச்சி தகவல்


டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக உலகக்கோப்பை தொடர் ஒன்று அமெரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த தொடரின் பெரும்பாலான லீக் ஆட்டங்கள் அமெரிக்க மைதானங்களில் நடத்தப்பட்டன. பாரம்பரியமாக கிரிக்கெட் நடத்திய அனுபவம் அமெரிக்காவுக்கு கிடையாது.

இதனால் போட்டிக்கான ஆடுகளங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டன. அந்த வகையில் பெரும் தொகையை ஐசிசியும், அமெரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் செலவிட்டதாக கூறப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள கிரிக்கெட் மைதானம், டி20 உலகக்கோப்பைக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.

கிரிக்கெட் தொடர் முடிந்ததும், நியூயார்க் கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோன்று அமெரிக்காவில் செலவுகள் அதிகம் என்பதால் ஐசிசி எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் ஆட்டத்தை காண வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தியால் ஐசிசிக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் தொடர்பாக இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி ஆண்டு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தின்போது ஐசிசியின் புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐசிசி தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவுக்கு பதிலாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா புதிய தலைவராக நியமிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

news18



 



Post a Comment

Previous Post Next Post