மைக்ரோசாஃப்ட்டின் Windows 10 சாப்ட்வேரில் பாதிப்பு - உலகம் முழுவதும் முடங்கிய சேவைகள்

மைக்ரோசாஃப்ட்டின் Windows 10 சாப்ட்வேரில் பாதிப்பு - உலகம் முழுவதும் முடங்கிய சேவைகள்


மைக்ரோசாஃப்ட்டின் Windows 10 சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதால் உலகம் முழுவதும் பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளன.

மைக்ரோசாஃப்ட்டின் Windows 10-ல் (19) திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. Crowdstrike Anti Virus அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் அந்த மென்பொருளில் இயங்கும் கணினிகள் மற்றும் மடிக் கணினிகள் செயலிழந்தன. உலகம் முழுவதும் Microsoft பயனாளர்களின் பலரது கணினிகளில் Error என காட்டி வருவதால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் வங்கிகள், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மும்பை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இண்டிகோ, ஆகாசா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்களின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல், தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், சிக்கல்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக Microsoft நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், படிப்படியாக இயல்பு நிலை திரும்பும் என்றும் மைக்ரோசாப்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மைக்ரோசாஃப் பிரச்னையால் யாரும் அச்சப்பட தேவையில்லை என மைக்ரோசாஃப்ட் கவுரவ மண்டல இயக்குநர் வெங்கட ரங்கன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மைக்ரோசாஃப்ட் பிரச்னையால் பேங்கிங் சர்வர் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், எந்த தரவுகளும் திருடப்படவில்லை, யாரும் அச்சப்பட வேண்டாம் என வெங்கட் ராமன் தெரிவித்துள்ளார்.

news18



 



Post a Comment

Previous Post Next Post