கடந்த 2007-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் தொடரிலேயே தோனியின் தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டதை கைப்பற்றி அசத்தியது. அதற்கடுத்து தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்று முடிந்த 2024 டி20 உலக கோப்பையை ரோகித் சர்மாவின் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.
இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அளித்துள்ள வேளையில் தனிப்பட்ட வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஒரு ஐ.சி.சி கோப்பையையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று காத்திருந்த ரோகித் சர்மாவிற்கும் இந்த கோப்பை ஒரு மிகப்பெரிய ஆறுதலை தந்துள்ளது.
அதோடு கபில் தேவ், தோனி ஆகியிருக்கு அடுத்து ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையும் ரோகித் சர்மா இந்த வெற்றியின் மூலம் பெற்றுள்ளார். நடைபெற்று முடிந்த இந்த தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா மைதானத்திலேயே கண்கலங்கிய தருணத்தையும் நம்மால் பார்க்க முடிந்தது.
அதோடு நீண்ட ஆண்டுகளாகவே இந்த வெற்றிக்காக காத்திருந்த ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே மிகவும் கண்கலங்கிய படி உணர்ச்சிகரமாக இந்த வெற்றியை கொண்டாடி இருந்தனர். அதோடு அவர்கள் இருவரும் இந்த போட்டி முடிந்ததுமே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினர்.
இருப்பினும் உலக கோப்பை வென்ற இந்த இருவரையும் அனைவரும் ஒரு சேர வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மாவின் அம்மா அவரது சமூக வலைத பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அதாவது கோப்பையை வென்ற பின்னர் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சமைரா (ரோஹித்தின் மகள்) ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர் குறிப்பிட்டதாவது :
தோளின் மேல் மகள் இருக்கிறாள், அவன்(ரோஹித்) பின்னால் தேசமே நிற்கிறது, பக்கத்தில் சகோதரன் இருக்கிறான் என விராட் கோலியையும் சேர்த்து அவரது அம்மா சகோதரர் என்று பதிவிட்டது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக ரோகித் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் ரவி சாஸ்திரி அவர்களை சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து தற்போது இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments