2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது அண்மையில் நடைபெற்ற முடிந்தது. இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இந்த தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். அவரது பந்துவீச்சு அனைவரது மத்தியிலும் பாராட்டப்பட்டு வரும் வேளையில் அவரே உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்று பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா தற்போதைய சிறந்த பந்துவீச்சாளர் இல்லை என்றும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தான் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டிஸ் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது ஜூன் 10-ஆம் தேதி முதல் துவங்க உள்ள வேளையில் அந்த போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் லாரா கூறியதாவது : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவரின் புள்ளி விவரங்கள் மிகவும் அற்புதமானவை. இங்கிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதனைகளை செய்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது மனநிலை இல்லை என்பது எனக்கு தெரியும்.
ஆனாலும் தற்போது அவர் அவரது கரியரின் இறுதியில் நிற்கிறார். தனது கடைசி போட்டியில் விளையாட இருக்கும் அவர் தற்போதைய மிகச்சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. என்னை பொருத்தவரை அவரே மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments