வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-48

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-48


236. வினா : இரட்டைக் கொள்கையை வலியுறுத்தும் குறள் கருத்து எது?
விடை: பகுத்துண்ணல், பல் உயிர் காத்தல் 
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.(322)

237. வினா : நூலோர் கூறியவற்றில் தலையானது எது?
விடை: தானும் உண்டு, பிற உயிர்களையும் காத்தலே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.(322)

238. வினா : கூத்து பார்க்கும் கூட்டம் போன்றது எது?
விடை: செல்வம் வருவதும் போவதும்
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.(332)

239. வினா : உயிரை அறுக்கும் வாள் எது?
விடை : ஒவ்வொரு நாளின் முடிவும் உயிரை அறுக்கும் வாள் ஆகும் நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.(334)

240. வினா : மரணம் வருவதற்குள் எதைச் செய்தல் வேண்டும்?
விடை : நற்செயல்கள் 
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.(335)

(தொடரும்)


 



Post a Comment

Previous Post Next Post