முட்டைகளை உடைக்காமல் 85 தரை ஓடுகளை நொறுக்கிச் சாதனை படைத்த சிங்கப்பூரர்

முட்டைகளை உடைக்காமல் 85 தரை ஓடுகளை நொறுக்கிச் சாதனை படைத்த சிங்கப்பூரர்


சிங்கப்பூரைச் சேர்ந்த லீ யுஹுவா (Li Yuhua) நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளை உடைக்காமல் 85 தரை ஓடுகளை மட்டும் நொறுக்கிச் சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

59 வயது லீ Zi Wu Men தற்காப்புக் கலையில் வல்லுநர். 

சென்ற ஆண்டு (2023) அவர் 30 விநாடிகளில் 69 தரை ஓடுகளை நொறுக்கிச் சாதனை படைத்ததாக 8 World செய்தி கூறியது. 

நேற்று (7 ஜூலை) அவர் 30 விநாடிகளில் 85 தரை ஓடுகளை நொறுக்கிச் சென்ற ஆண்டு படைத்த சாதனையை முறியடித்திருக்கிறார். 

ஒவ்வொரு நாற்காலி மீதும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்ததாக 8 World செய்தி குறிப்பிட்டது. 

முட்டைக்கு மேல் தரை ஓடு வைக்கப்பட்டிருந்தது. 

லீ சாமர்த்தியமாக முட்டையை உடைக்காமல் தரை ஓடுகளை மட்டும் நொறுக்கித் தள்ளினார். 

சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தக நிறுவனம் லீ படைத்த சாதனையை உறுதிசெய்து அவருக்குச் சான்றிதழை வழங்கியது. 

seithi



 



Post a Comment

Previous Post Next Post