ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – முன்னாள் தேர்தல் ஆணையார் மொஹமட்

ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை – முன்னாள் தேர்தல் ஆணையார் மொஹமட்


ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என முன்னாள் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகமும், தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் ஒரு ஜனாதிபதித் தேர்தலும் பிற்போடப்படவில்லை. தேர்தல் ஆணைக்குழு தேர்தல் தொடர்பாக அறிவித்ததன் பின்னர் பிற்போட எந்த சட்ட ஏற்பாடுகளும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

நீர்கொழும்பில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து மேலும் இவ்வாறு தெரிவித்தார்…

“ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியே ஆகவேண்டும். ஒத்திவைக்க முடியாது. இதற்கு முன்னர் நடந்த எட்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் எந்தவித ஒத்திவைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. வடகிழக்கில் யுத்த நிலைமை ஏற்பட்ட போதும் தெற்கில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் ஜனாதிபதித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படவில்லை. ஆகவே, குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடைபெறும்” என்றார்.

lankatruth



 



Post a Comment

Previous Post Next Post