'90 ரூபாய்க்கு வீடு... குடியேறினால் ரூ.27 லட்சம் கிடைக்கும்' - எங்கே இந்த சலுகை தெரியுமா?

'90 ரூபாய்க்கு வீடு... குடியேறினால் ரூ.27 லட்சம் கிடைக்கும்' - எங்கே இந்த சலுகை தெரியுமா?


அமைதியான இடத்திற்குச் செல்லும் போதெல்லாம், நீங்கள் எப்போதும் இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது நிச்சயமாக உங்கள் மனதில் தோன்றும். இருப்பினும், அதற்கு பெரும்பாலும சாத்தியம் இருக்காது.

ஏனென்றால் வேலை-வணிகம் மற்றும் பல விஷயங்கள் உங்களை அங்கு மாற்ற அனுமதிக்காது. ஆனால் அப்படிப்பட்ட சொர்க்கம் போன்ற இடத்தில் வாழ்வதற்கு பணம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இத்தாலியில் உள்ள ஒரு மாகாணம் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு அற்புதமான சலுகையை வழங்குகிறது. சொர்க்கம் போன்ற இடத்தில் குடியேற அரசு ரூ.27 லட்சம் தருகிறது.

Euronews இன் அறிக்கையின்படி, இத்தாலியின் டஸ்கனி மாகாணத்தில் குடியேற்றம் மற்றும் மக்கள்தொகை குறைவதால் பிரச்சனையில் உள்ள அரசு ஒரு சூப்பரான சலுகையை அறிவித்துள்ளது. இதற்கு ‘ரெசிடென்சி இன் ஹில்ஸ் 2024’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ், இந்த மாகாணத்தில் யாராவது வீடு வாங்கினால், அவருக்கு €10,000 முதல் €30,000 வரை அதாவது ரூ.9 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை கிடைக்கும்.

வீடு வழங்கப்படும் இடத்தில் 119 பேர் மட்டுமே வசிக்கின்றனர். டஸ்கன் மலைகள் இத்தாலியின் மிக அழகான சில இடங்களில் ஒன்று.

கிராமங்களில் மக்கள் தொகையை அதிகரிக்க நிர்வாகம் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வெறும் 1 யூரோ அதாவது 90 ரூபாய்க்கு வீடு கிடைக்கும். இருப்பினும், அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர் ஒரு இத்தாலியராக அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருக்க வேண்டும்.  வெளியில் இருந்து வருபவர்கள் 10 ஆண்டுகளுக்கு குடியிருப்பு அனுமதி பெற வேண்டும். வீட்டை சீரமைக்க செலவிடப்படும் பணத்தில் 50 சதவீதம் மட்டுமே அரசிடம் இருந்து பெறப்படும். இந்த முழு சலுகையின் நோக்கம் உள்ளூர் பொருளாதாரத்தை அதிகரிப்பதாகும், ஏனெனில் மக்கள் குடியேறும்போது, ​​வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என இத்தாலி அரசு கருதுகிறது.


news18



 



Post a Comment

Previous Post Next Post