உலகில் முதன் முதலில் தவறான முடிவெடுத்த ரோபோ

உலகில் முதன் முதலில் தவறான முடிவெடுத்த ரோபோ


தென் கொரியாவில் (South Korea) ரோபோ ஒன்று தவறான முடிவெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் குமி நகர சபையில் சுமார் ஒரு வருடமாக பணியாற்றி வந்த ரோபோவே (Robot) செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்து செயலிழந்த நிலையில், ரொபோவை பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ ஒரு இடத்தில் சுழன்று, பின்னர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த சம்பவத்திற்கான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் செயலிழந்த ரோபோவிற்க்கு குமி நகர மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தென் கொரிய (South Korea) ஊடகங்கள் இந்த சம்பவத்தை நாட்டின் முதல் ''ரோபோ தற்கொலை'' என்று தெரிவித்துள்ளன.

ibctamil


 



Post a Comment

Previous Post Next Post