கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறிய அதிர்ச்சி தகவல்

கடலின் வெப்பநிலை அதிகரிப்பால் ஆபத்தா? விஞ்ஞானிகள் கூறிய அதிர்ச்சி தகவல்


உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாக கடல் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடலின் வெப்பநிலை தொடர்ந்து வருவதால் உலகத்தில் பல ஆபத்துகள் தொடர்ந்து வரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

உலக வெப்பமயமாதலின் ஒரு பகுதியாக கடல் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது அமெரிக்காவில் உள்ள மைனே பல்கலைக்கழகத்தின் காலநிலை மறுபரிசீலனையின்படி, சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை 1982-2011ல் இருந்ததை விட இன்று 1.25 டிகிரி பாரன்ஹீட் அதிகம் வெப்பமாக உள்ளது.

அந்த வகையில் அவர்கள் கருத்தின் படி இந்த வெப்பநிலை அதிகமானதிற்கு காரணம் காலநிலை மாற்றமும் சுற்றுச்சூழல் அமைப்பும் தான் காரணம் என கூறுகின்றனர்.மார்ச் மாதத்தில் சராசரி உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை 21.07 டிகிரி செல்சியஸ் அல்லது 69.93 டிகிரி பாரன்ஹீட் ஆகும்.

மார்ச் 2024ன் படி காற்றின் வெப்ப நிலை மற்றூம் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இரன்டுமே போட்டி போட்டு உயர்ந்துள்ளதாக வி!ஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதை தவிர அதிக கடல் வெப்பநிலை, புயல்களின் வலிமையை அதிகரிக்கிறது என்றும், கடல்களின் அசாதாரண வெப்பமயமாதல் சூறாவளிகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதைவடிவ எரிபொருட்களின் பயன்பாட்டின் காரணமாக, நீண்டகாலமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்து வருவதாகவும், வளிமண்டலத்திற்கு செல்லும் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்து, பூமியின் வெப்பமும் அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருந்தாலம் கடலின் வெப்பநிலை ஏன் இவ்வளவு உயர்ந்துள்ளது என சரியான காரணம் தங்களுக்கு தெரியவில்லை என கூறுகின்றனர்.

manithan


 



Post a Comment

Previous Post Next Post