Ticker

6/recent/ticker-posts

Ad Code



மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திக்குமுக்காடும் பா.ஜ.க! : இந்தியா கூட்டணி முன்வைத்த குற்றச்சாட்டுகள்!


2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின் தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது.

அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “நீட் மோசடி குறித்து தனி விவாதம் நடத்த வேண்டும்” என்றும், “நாடாளுமன்ற வளாகத்தில், சிலை அகற்றப்படுவது போன்ற விவகாரங்களில் முடிவு எடுக்கப்படும் முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அமைந்த கமிட்டியிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால், அரசு ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது. எனவே, அம்பேத்கர், காந்தி, சிவாஜி சிலைகளை மீண்டும் பழைய இடத்தில் வைக்க வேண்டும்” என்றும், “நீட் மோசடி குறித்து எதிர்க்கட்சிகள் பேசினால், பிரதமர் மாங்கல்யத்தை பற்றி பேசுகிறார். மணிப்பூரில் ஓராண்டுக்கு மேலாக பிரச்சனை நீடிக்கும் நிலையிலும், பல நாடுகளுக்கு செல்லும் பிரதமர், மணிப்பூர் செல்ல மறுக்கிறார். மக்கள் பிரச்சினைகளை பிரதமரும் பேசுவதில்லை. பா.ஜ.க.வும் பேசுவதில்லை” என்பதுமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள இயலாத பா.ஜ.க.வினர், பதில் இல்லாத காரணத்தால், மல்லிகார்ஜுன கார்கே பேசிக்கொண்டிருக்கும் போதே, வீண் முழக்கமிட்டு இடைமறித்தனர்.

எனினும், மல்லிகார்ஜுன கார்கே தனது பேச்சை இடைவிடாது, “400 இடங்களை கைப்பற்றுவோம் என முழக்கமிட்டவர்களுக்கு இன்று 240 இடங்கள் தான் பிடிக்க முடிந்துள்ளது. பா.ஜ.க திட்டங்களை மக்கள் ஏற்கவில்லை என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது” என தனது உரையை முடிவு செய்தார்.

இதனையடுத்து, மக்களவையில், பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க அரசின் அலட்சியம் மற்றும் வன்முறைவாத அரசியல் போக்கை வேறுபிரித்து காட்டினார்.

“இந்து மதக் கடவுளரும், மத குருமார்களும் போதிப்பது அகிம்சையைதான். ஆனால் பாஜக இம்சையையும் வெறுப்பையும் பொய்களையும் போதிக்கிறது. இந்துக்களுக்கு எதிராக இருக்கும் மோடி, இந்து அல்ல. பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ இந்துக்களுக்கானவை அல்ல.

கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், உயிரியலாக நான் பிறக்கவில்லை என்றும் கூறும் பிரதமர் மோடி, காந்தி இறந்து விட்டதாகவும் சினிமா மூலமே காந்தியைப் பற்றி மக்களுக்கு தெரியவந்ததாகவும் கூறுகிறார். கடவுளுக்கு காந்தி பற்றி தெரியவில்லையா?

மணிப்பூரை பற்றி இன்று வரை இந்தியப் பிரதமர் பேசவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? இந்தியாவின் மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று என்பதை பிரதமர் மறந்துவிட்டாரா? பிரதமரும் உள்துறை அமைச்சரும் மணிப்பூர் இருப்பதாகவே நினைக்கவில்லை.

மோடி அவர்களே, குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இம்முறை, குஜராத் மாநிலத்தில் வெல்லப்போவது இந்தியா கூட்டணி. வீழப்போவது பா.ஜ.க.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மோடி போட்டியிடுவதற்கு முன் கூட, இரு முறை அயோத்தியில் கணிப்புகள் நடத்தப்பட்டன. அந்த கணிப்புகளில், மோடியின் தோல்விக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருந்ததன் காரணமாகவே, வாரணாசியில் போட்டியிட முடிவெடுத்தார் மோடி.

சபாநாயகர் தீர்ப்பு தான் நாடாளுமன்றத்தில் இறுதியானது. சபாநாயகர் அனைவரையும் ஒன்றாக கருத வேண்டும். பதவியேற்பின் போது, எனக்கு கை கொடுக்கும் சபாநாயகர் நிமிர்ந்து நின்று கை கொடுக்கிறார். ஆனால் பிரதமருக்கு கை கொடுக்கும் போது குனிந்து கொள்கிறார்” என தெரிவித்தார்.

இதனால், மக்களவையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, எதிர்க்கட்சிகளின் குரல் ஓங்கி ஒலித்தது.

kalaignarseithigal


 



Post a Comment

0 Comments