Ticker

6/recent/ticker-posts

Ad Code



விமான நிலையங்களே இல்லாத 5 நாடுகளின் பட்டியல் இதோ..!!


உலகில் இன்னும் சில நாடுகளில் பல காரணங்களால் சொந்த விமான நிலையங்கள் இல்லாமல் இருக்கின்றன. விமான நிலையம் இல்லாவிட்டாலும், இந்த நாடுகள் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு விமானம் மூலம் செல்வது தான் வழக்கம். இதற்காக, ஒவ்வொரு நாட்டிலும் விமான நிலையங்கள் இருக்கும். ஆனால் உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத 5 நாடுகள் காணப்படுகின்றன. வாடிகன் நகர், சான் மரினோ, மொனாக்கோ, லிச்சென்ஸ்டீன், அன்டோரா ஆகிய நாடுகளே விமான நிலையங்கள் இல்லாத நாடுகளாகும்.

வாடிகன் நகரம்:

வாடிகன் நகரம் உலகின் மிகச்சிறிய நாடாகும், இங்கு வெறும் 840 பேர் மட்டுமே வசிக்கின்றனர். 

வெறும் 0.44 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட வாட்டிக்கன் சிட்டியில், விமானம் தரையிறங்குவதற்கு அதிக இடமில்லாததால் இங்கு விமான நிலையம் இல்லை. இதேவேளை, இதன் அயல் நாடுகள் இந்த நகருக்குள் நுழைவதற்கான போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றன. 

ஆகையால், இங்கே செல்ல விரும்புவோர் அதன் அயல் நாடுகளில் உள்ள விமான நிலையங்களைப் பயன்படுத்தி அந்நாட்டுக்கு செல்கின்றனர். குறிப்பாக சியம்பினோ மற்றும் பியூம்சினோ ஆகிய நாடுகளின் வாயிலாக வாடிகனுக்கு செல்ல முடியும். இல்லையெனில் ரயிலில் வெறும் 30 நிமிடங்கள் பயணித்தால் பக்கத்து நாடான இத்தாலியின் ஃபியமிசினோ மற்றும் சியாம்பினோ விமான நிலையத்தை அடையலாம்.

மொனாக்கோ:

இது உலகின் 2வது சிறிய நாடு, மூன்று பக்கங்களிலும் பிரான்சால் சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு பிரான்சின் நைஸ் கோட் டி’அஸூர் விமான நிலையத்தில் தரையிறங்கி பிறகு ஒரு வண்டி மூலமாகவோ அல்லது படகு மூலமாகவோ செல்லலாம். இதன் சிறிய நிலப்பரப்பு காரணமாக தனி விமான நிலையம் அமைப்பதற்கு முடியாத சூழல் உள்ளது, எனவே இந்த நாட்டிற்கு என தனியாக எந்தவொரு விமான நிலையமும் இல்லை.

சான் மரினோ:

30000-க்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட உலகின் 5-வது சிறிய நாடு சான் மரினோ ஆகும். 

உலகின் மிகவும் பழைமையான நாடுகளில் இதுவும் ஒன்றாகும். முற்றிலும் இத்தாலியால் இந்த நாடு சூழப்பட்டுள்ளது. இந்த நாட்டிற்கு கடல் மார்க்கம் இல்லை, மிக குட்டியான நாடு இது என்பதால் விமான நிலையம் இல்லை. ஆகையால், இத்தாலிக்கு சென்று அங்கிருந்தே சான் மரினோவிற்கு செல்ல வேண்டும். இத்தாலியின் எந்த விமான நிலையத்திற்குச் சென்றாலும் அங்கிருந்து சான் மரினோவிற்கு பயணிக்க முடியும்.

அன்டோரா:

இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே உள்ள பைரனீஸ் மலையில் அமைந்துள்ளது. 

ஆகையால், இந்த நாடு பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் விமானங்களை நம்பி இருக்கிறது. மற்ற நாடுகளைப் போல சிறியதாக இல்லாவிட்டாலும், அன்டோரா ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பிரச்சனை மலைகள்தான். பள்ளத்தாக்குகளிலிருந்து 3000 மீட்டர் தொலைவில் பல சிகரங்கள் இருப்பதால் உயரமான இடங்களில் விமானங்களை இயக்குவது கடினம் மற்றும் ஆபத்தானது. அதிலும் குறிப்பாக பனி காலங்களில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

லிச்சென்ஸ்டீன்:

இது சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு சிறிய நாடாகும். ஒட்டுமொத்தமாகவே இந்த நாடு 75 கிலோ மீட்டர் பரப்பளவை மட்டுமே கொண்டிருக்கின்றது.

லிச்சென்ஸ்டைனின் இடம் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகளின் காரணமாக இந்நாட்டில் விமானநிலையம் இல்லை. உள்ளூர்வாசிகள் கார் அல்லது பஸ்ஸைப் பயன்படுத்தி 120 கிமீ தொலைவில் உள்ள சூரிச் விமான நிலையத்தை அடைகின்றனர்.

news18


 



Post a Comment

0 Comments