மாட்ரிட்டிலிருந்து மொந்தேவீடியோவுக்குச் சென்ற போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரக ஏர் யூரோபா விமானத்தில் ஏற்பட்ட காற்று கொந்தளிப்பைத் தொடர்ந்து 40-க்கும் அதிகமான பயணிகள் காயம் அடைந்த நிலையில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
325 பயணிகளுடன் சென்ற விமானம் பிரேசிலின் நத்தால் விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது.
சிறு காயங்களுக்கு இலக்கான 40 பயணிகள் நத்தாலிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரேசிலின் Rio Grande do Norte சுகாதார செயலகம் நேற்று மாலை வரை மொத்தம் 11 பேர் Monsenhor Walfredo Gurgel மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை உறுதிப்படுத்தியது.
காயமடைந்தவர்களில் ஸ்பெயின், அர்ஜென்டினா, உருகுவே, இஸ்ரேல், பொலிவியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளாவர்.
தற்போது ஏழு பயணிகள் பல்வேறு காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருவதாக ஏர் யூரோபா தெரிவித்துள்ளது.
பயணிகளை ஏற்றி வருவதற்காக மெட்ரிட்டிலிருந்து ஒரு விமானம் நத்தாலுக்குப் புறப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் தீவிரக் காயம் ஏற்படாமல் உயிர் பிழைத்தனர்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments