ஆல்திரேலியாவில் வேலை செய்துகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், 4 வருடங்கள் கழித்துத் தமது குடும்பத்தைக் காணச் செல்லவிருந்தபோது விமானத்தில் மாண்டார்.
மெல்பர்ன் (Melbourne) நகரிலிருந்து டில்லிக்குச் செல்லவிருந்த Qantas விமானம் புறப்படுவதற்கு முன் அவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் ஜூன் 20ஆம் தேதி நேர்ந்ததாக news.com.au செய்தித்தளம் தெரிவித்தது.
24 வயது மன்பிரீத் கௌர் (Manpreet Kaur) விமான நிலையத்துக்குச் செல்வதற்குச் சில மணி நேரம் முன்னரே அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது தோழர் Herald Sun செய்தித்தளத்திடம் கூறினார்.
விமான இருக்கையில் அமர்ந்தபிறகு இருக்கை வாரை அணியச் சிரமப்பட்ட அவர், திடீரென இருக்கைக்கு முன்னால் விழுந்தார்.
விமானச் சிப்பந்திகளும் அவசரச் சேவைப் பிரிவினரும் அவரைக் காப்பாற்ற முயன்றனர். அவர் மாண்டது உறுதிசெய்யப்பட்டது.
அவர் காசநோயால் மாண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.
மன்பிரீத் Australia Post தபால் சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சமையல் நிபுணராகப் பணியாற்றவேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.
seithi
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments