பிரான்ஸ் தேர்தல்: வலதுசாரியினரின் வெற்றியை எதிர்த்து பாரீஸில் வெடித்த வன்முறை

பிரான்ஸ் தேர்தல்: வலதுசாரியினரின் வெற்றியை எதிர்த்து பாரீஸில் வெடித்த வன்முறை


பிரான்சில் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததுமே, ஜனாதிபதியின் இந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பலாம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அவர்கள் கணித்ததுபோலவே, தேர்தலில் முதல் சுற்று முடிவுகள் ஆளும் கட்சிக்கு எதிராக அமைந்துள்ளன. எதிர்பார்த்ததுபோலவே, வலதுசாரிக் கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன், மேக்ரான் கட்சிக்கு இரண்டாம் இடம் கூட கிடைக்கவில்லை, மூன்றாம் இடம்தான் கிடைத்துள்ளது.

இந்நிலையில், வலதுசாரியினரின் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரியினர் பாரீஸில் வன்முறையில் இறங்கியுள்ளார்கள்.

கடைகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதும், தீவைப்பு சம்பவங்களுமாக, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வன்முறை வெடிக்க, பேரணியில் ஈடுபட்டவர்களைக் கலைக்க, பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளார்கள்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள்.  

இதற்கிடையில், வலதுசாரியினர் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க என்ன செய்வது என்ற யோசனையில் பிற கட்சிகள் இறங்கியுள்ளன.

விடயம் என்னவென்றால், பிரான்சில் முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறும் இரண்டு கட்சிகளுக்கிடையில்தான் இரண்டாவது கட்ட போட்டி நடைபெறும். அப்படி பார்த்தால், மேக்ரான் கட்சி போட்டியிட வாய்ப்பேயில்லை.

ஆகவே, சில கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்து, அதன் மூலம் வலதுசாரியினரை வெற்றி பெறச் செய்யவிடாமல் தடுக்க, திட்டங்கள் தீட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

lankasri



 



Post a Comment

Previous Post Next Post