Ticker

6/recent/ticker-posts

Ad Code



மலைப்பாம்பின் பிடியில் சிக்கும்போது ஏன் உயிர் தப்ப முடிவதில்லை?


மலைப்பாம்பு மனிதனை விழுங்கும் சம்பவங்கள் மிக அரிதானவை.

என்றாலும் இந்தோனேசியா போன்ற சில நாடுகளில் அத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைப் பார்க்கிறோம்.

அண்மையில் சுலாவேசியில் காணாமல்போன பெண் ஒருவரின் முழு உடல் மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

சுலாவேசியில் இது முதல் சம்பவம் அல்ல; 2017ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 4 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மலைப்பாம்பின் பிடியில் சிக்கும்போது ஏன் உயிர் தப்ப முடிவதில்லை? காரணத்தைத் தேடியது 'செய்தி'.

உலகில் நீண்ட காலம் உயிர்வாழும் பாம்பு என்றால் அது மலைப்பாம்புதான் என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் ஹேரி W. கிரீன் (Dr. Harry W. Greene).

யாரும் உதவிக்கு இல்லை என்றால் மலைப்பாம்பின் பிடியிலிருந்து தப்பிப்பது சிரமம் என்று அவர் கூறுகிறார்.

பொதுவாக மலைப்பாம்பு 20இல் இருந்து 25 அடி நீளம் வரை வளரும். குரங்கு, ஓராங் ஊத்தான் போன்றவற்றையும் சில நேரங்களில் மனிதர்களையும் அவை உண்ணும் என்று USA TODAYஇடம் தெரிவித்தார் டாக்டர் கிரீன்.

மலைப்பாம்பு 2 வழிகளில் மனிதனைத் தாக்கும்.

➡️ திடுக்கிடும்போது தற்காத்துக்கொள்வதற்காக
➡️ சத்தமில்லாமல் எங்கேயாவது மறைந்திருக்கும்போது

என்றார் டாக்டர் கிரீன்.

மலைப்பாம்பு முதலில் கடிக்கும்.

பின்னர் சில விநாடிகளில் மனிதனின் உடலைச் சுற்றி வளைக்கும்.

அதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் துண்டிக்கப்படும்.

சுவாசக் குழாய்கள் செயலிழந்து, மார்பு விரிவடைவது நின்றுபோகும்.

இதுதான் மனிதன் உடனே மாண்டுபோகக் காரணம் என்றார் டாக்டர் கிரீன்.

சுற்றிவளைத்து மனிதனை முழுமையாக விழுங்குவதற்கு மலைப்பாம்புக்கு நேரம் எடுக்கும்.

சுமார் ஒரு மணிநேரத்தில் மனிதனின் முழு உடல் அதன் வயிற்றுக்குள் சென்றுவிடும்.

சிலர் கையில் இருக்கும் கத்தி அல்லது துப்பாக்கியால் மலைப்பாம்பைத் தாக்கித் தப்பிப்பதுண்டு என்று டாக்டர் கிரீன் கூறினார்.

சிங்கப்பூரில் பாம்புகளைக் கண்டால் என்ன செய்வது?

தேசியப் பூங்காக் கழகத்தை (NParks) 1800-476-1600 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

seithi


 



Post a Comment

0 Comments