பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்ப மலேசியா தயார்: பிரதமர்

பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்ப மலேசியா தயார்: பிரதமர்


ஐக்கிய நாட்டு நிறுவனம் அனுமதி வழங்கினால் பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்புவது தொடர்பில் இந்தோனேசியாவுடன் ஒத்துழைக்க மலேசியா தயார்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

இந்தேனேசியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாந்தோவுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார்.

இரு தலைவர்களின் கலந்துரையாடலில் பாலஸ்தீனம் குறித்த பேச்சு முக்கியப் பங்கு வகித்தது.

மலேசியா - இந்தோனேசியா அனைத்துலக அமைதிப்படையில் ஒத்துழைப்பு எனும் யோசனையையும் இந்த ஒத்துழைப்பை ஆசியான் வட்டாரம் முழுமைக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தையும் தாம் வரவேற்கிறேன்.

குறிப்பாக வட்டார, அனைத்துலக ஒத்துழைப்பு  அமைதி ஆகியவை பற்றிய பிரபோவோவின் கண்ணோட்டம் பற்றித் தாங்கள் பேசியதாகப் பிரதமர் அன்வார் கூறினார்.

பாலஸ்தீனத்தில் நிலவும் மனிதநேய நிலவரம் குறித்துப் பேசுகையில், மலேசியா ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதாக அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

nambikkai


 



Post a Comment

Previous Post Next Post