இந்த பெட்டிக்குள்ள போனா அவ்ளோதான்... விபரீத கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்த பெட்டிக்குள்ள போனா அவ்ளோதான்... விபரீத கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!


தற்கொலை எண்ணம் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பல நாடுகளில் மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் தற்கொலை செய்ய விரும்புவோரின் நோக்கத்தின் அடிப்படையில் கருணை கொலைக்கு உதவுகின்றன. அதிலும், வலியின்றி மரணிப்பதற்கு வழிவகைகளை செய்து கொடுக்கின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவர்களின் மேற்பார்வை இல்லாமல், வலி இல்லாமல் தற்கொலை செய்ய விரும்புவோருக்கு படகு போன்ற ஒரு சிறிய வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஓடம்போல காட்சியளிக்கும் இந்த வாகனம் கடந்த 2019ஆம் ஆண்டில் 7 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் உருவாக்கப்பட்டது.

இந்த வாகனத்தில் படுத்துக் கொண்டு அங்கிருக்கும் பட்டனை அழுத்தினால், உள்ளே இருக்கும் ஆக்சிஜன் சில நொடிகளில் நைட்ரஜனாக மாறி சுயநினைவை இழக்க வைக்கும். பின்னர் அவர் மரணத்தை தழுவுவார். மயக்கத்திற்கு முன்பு வரை அவருக்கு எந்த வித பாதிப்போ, பதற்றமோ ஏற்படாது என்றும், தற்கொலை செய்வதற்கு இதைவிட ஒரு சிறந்த முறையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்றும் அதன் வடிவமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் தற்கொலைக்கு சட்டம் அனுமதிக்கவில்லை. இருப்பினும், கடும் நோய்வாய்ப்பட்டவர்களின் கருணைக் கொலைக்கு அனுமதி உண்டு. எனவே சுயநல நோக்கமின்றி வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவர்களுக்காக இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, கேள்விகளும் கேட்கப்படும். அதில் மனநல தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவருக்கு தற்கொலை அனுமதி கிடைக்கும். அதன்பிறகு இந்த வாகனத்தில் படுத்துக் கொண்டு, அவர்களே பட்டனை அழுத்தினால் சில நொடிகளில் மரணத்தை தழுவிக் கொள்ளலாம்.

இதற்கு கட்டணம் வெறும் 20 அமெரிக்க டாலர்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு ஒருவர் முன்பதிவு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் குறித்த விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை.

news18



 



Post a Comment

Previous Post Next Post