”ஜீவனாம்சம் பெண்களின் உரிமை” : உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு!

”ஜீவனாம்சம் பெண்களின் உரிமை” : உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு!


தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முகமது அப்துல் சமது என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னம் மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள்,"ஜீவனாம்சம் என்பது தொண்டு இல்லை. அது திருமணமான பெண்களின் உரிமை. மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125-ன் கீழ் கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற இஸ்லாமிய பெண்களுக்கு உரிமை உண்டு.” உத்தரவிட்டனர்.

இதையடுத்து தெலங்கானா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

kalaignarseithigal



 



Post a Comment

Previous Post Next Post