சுவரில் மட்டும் 1 டன் தங்கம்.. உலகின் முதல் தங்க ஹோட்டல்.. எங்குள்ளது தெரியுமா?

சுவரில் மட்டும் 1 டன் தங்கம்.. உலகின் முதல் தங்க ஹோட்டல்.. எங்குள்ளது தெரியுமா?


உலகின் பல ஆடம்பர ஹோட்டல்கள் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உலகின் முதல் தங்க முலாம் பூசப்பட்ட ஹோட்டல் பற்றி தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டல் தான் உலகின் முதல் தங்க ஹோட்டல் என்று அழைக்கப்படுகிறது.

இந்த 5 ஸ்டால் ஹோட்டல் தங்க முலாம் பூசப்பட்ட தொட்டிகள், பேசின்கள் மற்றும் கழிப்பறைகள் உட்பட ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. நீங்கள் இந்த அரச அரண்மனைக்கு செல்ல விரும்பினால், ரூ 9,000 முதல் ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்யலாம். இந்த ஹோட்டல் நிச்சயம் உங்களை ஒரு ராஜா அல்லது ராணியாக உணர வைக்கும்.

மேலும் இந்த ஹோட்டலில் உடற்பயிற்சி மையம், பார், உணவகம், ஓய்வறை மற்றும் வணிக மையம் போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன. இந்த ஹோட்டலின் தங்க முலாம் பூசப்பட்ட சுவர்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

உலகின் முதல் தங்கமுலாம் பூசப்பட்ட ஹோட்டல் என்று அறியப்படும் டோல்ஸ் பை விண்டாம் ஹனோய் கோல்டன் லேக் 2019-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்ட கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆனது. 25 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் மொத்தம் 400 அறைகள் உள்ளன.

மேலும், ஹோட்டல் ஊழியர்களின் ஆடைக் குறியீடு சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்ட்டலில் ஒரு இரவுக்கு தங்க வேண்டுமெனில் அதற்கு ரூ.26,000 ஆரம்ப விலையாகவும், அதிகபட்ச விலை 4.85 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்களும் ஒரு ராஜா அல்லது ராணியாக உணர விரும்பினால், தங்க முலாம் பூசப்பட்ட இந்த முதல் வகை ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும்.

உலகின் பல ஹோட்டல்களில் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் இருக்கலாம். ஆனால் ஹனோய் கோல்டன் லேக் ஹோட்டலின் வெளிப்புற சுவரில் மட்டும். 1 டன் தங்கம் பதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த ஹோட்டலில் தங்கக் கப்பில் காபி, தங்க தட்டில் சோறு என ராஜ மரியாதை உடன் கவனிக்கிறார்களாம்.. 

asianetnews



 



Post a Comment

Previous Post Next Post