பிரித்தானியாவுக்கு சுற்றுலா வந்திருந்த அவுஸ்திரேலிய பயணியான 11 வயது சிறுமி 8 கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய சுற்றுலா பயணியான 11 வயது சிறுமி ஒருவர் லெய்செஸ்டர் சதுக்கம்(Leicester Square) பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறுமி அவரது தாயாருடன் இருந்த போது இந்த தாக்குதலை தாக்குதல்தாரி அரங்கேற்றி இருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில், சிறுமிக்கு முகம், தோள்பட்டை, கழுத்து பகுதி ஆகியவற்றில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்றும் அவர்களது வழக்கறிஞர் டேவிட் பர்ன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 32 வயது ஐயோன் பிண்டாரு(Ioan Pintaru) என்ற நிலையான முகவரி இல்லாத ருமேனிய குடிமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐயோன் பிண்டாரு பாதிக்கப்பட்ட சிறுமியை அடைந்து அவரது கழுத்தை அசைய விடாமல் பார்த்துக் கொண்டதுடன், 8 முறை சிறுமியின் உடலை கத்தியால் குத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிண்டாரு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் செப்டம்பர் 10ம் திகதி Old Bailey-வில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments