கத்திரிக்கோல் காணாமற்போனதால் 200 விமான சேவைகள் ரத்து

கத்திரிக்கோல் காணாமற்போனதால் 200 விமான சேவைகள் ரத்து


ஜப்பானின் ஹொக்காய்டோவின் (Hokkaido) ஷின்-சிடோசே (Shin-Chitose) விமான நிலையத்தில் கத்திரிக்கோல் காணாமற்போனதால் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சுமார் 200 விமானச் சேவைகள் தாமதம் அடைந்தன, ஏறக்குறைய 35 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.

நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

சம்பவம் சென்ற சனிக்கிழமை (17 ஆகஸ்ட்) நடந்தது.

மலேசிய நேரப்படி அன்று காலை 9 மணிக்குக் கத்திரிக்கோல் காணாமற்போனது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பயணிகள் மீண்டும் சோதிக்கப்பட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதாகக் கூறப்பட்டது.

காணாமற்போன கத்திரிக்கோல் நேற்று (19 ஆகஸ்ட்) கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

nambikkai


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post