ராஜகுமாரியின் சுயம்வரம்-43

ராஜகுமாரியின் சுயம்வரம்-43


"சரி நாம் நின்று என்ன செய்வது.வாருங்கள் போய் நம் வீட்டு வேலைகளைக் கவனிப்போம்."என்றாள் மேரி அக்கா. 

"ஆமா அக்கா நான் வேறு பயறு ஊறவிட்டேன். கிராமத்தில் ஒரு தோசை செய்து கொடுத்தாங்க தானே. அதை நானும் செய்து பார்க்கலாம் என்று தான். ஒரு முயற்சி எடுக்கிறேன்." என்றாள் மூத்த மருமகள். 

"அட உண்மையாகவா? நேற்றுத்தான் லூசியா அதைப் பற்றி பேசினாள். இன்று நீ செய்கிறாய். "எனக் கூறி வாயைப் பிளந்தார் மேரி அக்கா. 

உடனே சின்ன மருமக சொன்னாள் "அக்கா இது வேலைக்கு சரி வராது." 

"எதுடி" என்று கேட்டாள் மூத்தவள். 

"இதோ அந்த மேரி அக்கா பேசியதைச் சொன்னேன்." என்றாள்.

"நான் என்னடி பேசினேன்." என சின்னவளிடம் வெடுக்கெனப் பாய்ந்தாள் மேரி அக்கா.  

"அய்யய்யோ எதற்கு இவ்வளவு கோபம். நான் ஏதோ விளையாட்டாய்க் கூறினேன்" என்றாள் சின்னவள். 

"நான் கோபப் படவில்லை உனது கிறுக்குத் தனத்தைச் சொன்னேன். குறுக்கால நுழைந்து ஏதாவது குழப்படி பண்ணுவது தானே உன் பொழுது போக்கு" என்றார் மேரி அக்கா. 

இப்போது உண்மையிலே கோபித்துக் கொண்டாள் சின்ன மருமகள். 
"எப்போ பார்த்தாலும் என்னைக் குறை கூறுவதே உங்கள் வேலை" எனச் சத்தமாய்க் கூறி விட்டு வீட்டை நேக்கி நகர்ந்தாள். 

அவளைத் தொடர்ந்து முன்னும் பின்னுமாய் ஒவ்வொருவரும். விலகிச் சென்றார்கள். 

அன்றைய வேலையின் சலிப்புத் தெரியாமலே வேலையை முடித்து விட்டார்கள் அடுத்தத்  தெருக்கூத்தைப் பற்றி பேசிக் கொண்டே. நேரம் மதியம் இரண்டானதும்  பாடசாலை விட்டு பிள்ளைகள் வீட்டை வந்து அடைந்தார்கள். 

அப்போது "அம்மா ரோட்டில் அழகான காரைப் பார்த்தோம். வெளிநாட்டுக் கார் போல் இருக்கு" என்றான் பாட்டிக்கு ரொம்ப பிடித்த பேரண். 

"நல்லாப் பார்த்தையாடா கண்ணு" என்று பாட்டி கேட்டார் 

"ஆமா பாட்டி நாங்க எல்லோரும் பக்கமாக போய் தொட்டுப் பார்த்தோம்" என்றாள் குட்டி பேபி ராணி. 

"அடியே ஏன்டி போனாய்" என்று அதட்டினாள் அவளது தாய் முத்த மருமகள். 

"ஏன்டி சொன்ன நீ இப்ப எனக்கு அடி விழும் பாரு.அம்மா அடிச்சா நீ செத்தாடி." என்று தங்கையை மிரட்டினான் பேரன்.
"போடா" என்றாள்  குட்டி பேபி ராணி.

"பேராண்டி" என பாட்டி அழைத்ததும்,"என்ன பாட்டி" என்று குரல் கொடுத்தவாறே குளிர்சாதனப்பெட்டியைத் திறந்தான் பேரன். 

"அதே போல் கார் தான் நீ படித்து முடித்ததும் வாங்க வேணும் சரியா?" என்றார் பாட்டி. 

மறுப்பே இல்லை உடனே "சரி பாட்டி" என்றான்  .

"இவங்க இரண்டு பேரும் லூசா?,இல்லை கேட்டுக் கொண்டு இருக்கும் நாம லூசா" என்றாள் சின்னவள். 

"சரி விடு விளையாடுவதை எல்லாம் நீ பெரிசு பண்ணாதே" என மூத்தவள் கூறிக் கொண்டு இருக்கையிலே மீண்டும் பொலிஸ் ஜீப் வந்து நிற்பதாய்க் கூறிக் கொண்டு சிலர் ரோட்டுக்குப் போனார்கள்.

இவர்கள் போகவில்லை.  "மொட்டை மாடிக்குப் போய் பாருடா தெரியுதா" என்று எனக் கூறி மகனை அனுப்பினாள். வந்த ஜீப் சிரிது நேரத்தில் காரை எடுத்துக் கொண்டு போய் விட்டது.  

கார்க் காரன் என்னானான்? அந்தப் பெண் நிலமை என்ன? வந்தவர்கள் எந்த ஊர்? பூசாரி சரவணன்  எங்கே? இப்படி பல மர்மங்களுக்கும் விடை மாலை வேளை ஒருத்தன் கொண்டு வந்தான். 

அவன் யார் புதிய வரவு பெரிய பதவி.

(தொடரும்)




 



Post a Comment

Previous Post Next Post