திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -58

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -58


குறள் 1276
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி 
அன்பின்மை சூழ்வ துடைத்து.

அம்மா! 
எதிர்வீட்டு எழிலரசி காலையில இருந்து 
இதுவரைக்கும் பத்து தடவையாச்சும் 
வந்து அன்புகமழ நட்போட பேசுனாம்மா! 
அப்பவே நெனச்சேம்மா! 
இவ என்னமோ சொல்லப்போறானு நெனச்சேன்! 
இந்த விடுமுறை முழுவதும் 
அவங்க மாமா வீட்டுக்குப் 
போகப்போறாளாம்! 
வலியவந்து பேசுறப்பவே நெனச்சேன்! 
இப்படி ஏடாகூடமா ஏதாச்சும்
சொல்லுவான்னு! சரி தற்காலிகப் 
பிரிவ தாங்கத்தானே வேணும்!

குறள் 1277
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் 
முன்னம் உணர்ந்த வளை.

அக்கா!
என் நட்புத்தோழி வடிவுக்கரசி 
ஈரப்பசை உள்ள குற்றாலம் பகுதியில் 
இருக்கின்றாள்!
போனவாரம் வந்தவ இந்தவாரம் வந்திருக்கா! 
ஆனால் என்னோடபேசிட்டு 
கிளம்பிருவானு 
அவமனச எப்படியோ 
இந்த வளையல் தெரிஞ்சுகிட்டு 
கையில் நிக்காம 
கழன்று கழன்று 
வருதுக்கா!

குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் 
எழுநாளேம் மேனி பசந்து.

ஏய் அமுதா! 
இந்தக் குமுதா 
ஊருக்குப்போறேன்னு 
நேத்துவந்துசொல்லிட்டுப் 
போனா! 
இன்று பார்க்க முடியாதே 
என்ற பிரிவின்
ஏக்கமோ 
ஏழுநாளா கூடுகட்னமாதிரி 
மனச படுத்துதுடி!

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post