வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-52

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-52


256. வினா:இரு வேறு உலகத்து இயற்கை எவை?
விடை:1. செல்வம் உடையவராதல் ,2. அறிவுடைய வராதல்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.(374)

257. வினா: மிக்க வலிமையுடையது எது?
விடை:ஊழ் (விதி)
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்.(380)

258. வினா:அரசருள் ஏறு போன்றவன் யார்?
விடை: படை, குடிமக்கள், உணவு வளம், அமைச்சர், நட்பு, காவல் இவை பெற்ற அரசன் 
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.(381)

259. வினா :சிறந்த அரசு என்பது எது?
விடை: பொருளீட்டி சேர்த்து, காத்து, பகுத்துச் செலவிடுவதே சிறந்த அரசு இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தாக,(385)

260. வினா மக்களிடம் தெய்வமாகப் போற்றப்படுபவர் யார்?
விடை: நீதி தவறாமல் காத்திடும் ஆட்சியாளன் 
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.(388)

(தொடரும்)



 



Post a Comment

Previous Post Next Post