திரையை அதிக நேரம் பார்க்கும் இளையர்கள் - எதிர்கொள்ளும் சிங்கப்பூர்

திரையை அதிக நேரம் பார்க்கும் இளையர்கள் - எதிர்கொள்ளும் சிங்கப்பூர்


சிங்கப்பூரில் இளையர்கள் திரையை அதிக நேரம் பார்ப்பதைத் தடுக்கக் கூடுதல் முயற்சி எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கூறியுள்ளார்.

"இளையர்களுக்கு விடுக்கப்படும் ஆலோசனையைத் தெளிவுபடுத்தவேண்டும். அதைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளிலும் பாலர்பள்ளிகளிலும் அமல்படுத்தவேண்டும். வீடுகளிலும் அத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வழிகளை ஆராயவேண்டும் " என்றும் அவர் Facebookஇல் கூறினார்.

சமூக ஊடகங்களில் சுகாதார எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் அண்மையில் கூறியதை அடுத்து திரு ஓங் அவ்வாறு கூறியுள்ளார். 

எவ்வாறு புகையிலைப் பொருள்களில் சுகாதார எச்சரிக்கை இருக்குமோ அதனைப்போல் சமூக ஊடகத் தளங்களிலும் எச்சரிக்கை விடுக்கவேண்டும் என்று சுகாதார அதிகாரி விவேக் மூர்த்தி வலியுறுத்தினார்.

இளம் வயதினரிடையே அதிகரிக்கும் மனநலப் பிரச்சினைகளுக்குச் சமூக ஊடகம் ஒரு முக்கியக் காரணம் என்று அவர் கூறினார்.

டாக்டர் மூர்த்தியின் அக்கறைகளைப் புரிந்துகொள்ளமுடிவதாகத் திரு ஓங் சொன்னார்.

கடந்த சில மாதங்களாகச் சுகாதார அமைச்சும் குடும்ப மேம்பாட்டு அமைச்சும் பிரச்சினையைப் பற்றிக் கலந்துபேசியதாக அவர் கூறினார்.

வரும் மாதங்களில் பிரச்சினைக்கு எதிராகப் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

seithi



 



Post a Comment

Previous Post Next Post