ஜெர்மனி நாட்டில் வாழும் Gunther VI என்ற நாயிற்கு கோடிகளில் சொத்துக்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
கவுண்டஸ் கோர்லோட்டா லிபென்ஸ்டீன் என்பவர் அவருக்கு பின் அவருடைய சொத்துக்களை பார்த்துக் கொள்ள குழந்தைகளோ அல்லது நெருங்கிய உறவினர்களோ இல்லாத காரணத்தினால் அவரின் பலக்கோடிக்கணக்கான சொத்துக்களை குந்தர் III என்ற வளர்ப்பு நாயின் பெயரில் எழுதி வைக்கப்பட்டது.
குந்தர் இறந்த பின்னர் அந்த சொத்துக்கள் அந்த நாயின் பரம்பரைக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
3358 கோடி சொத்துக்கு ஒரே வாரிசாக இருந்தது குந்தர் VI என்ற அந்த நாய் மட்டுமே.
இந்த நாய் “ஜெர்மன் ஷெப்பர்ட்” இனத்தை சேர்ந்தது.
தற்போது உலகின் பணக்கார நாயாக குந்தர் III பார்க்கப்படுகிறது, ஜெர்மனியில் தற்போது ஆடம்பரமாக வாழ்ந்து இந்த நாய் எப்படி இவ்வளவு சொத்துக்களையும் பார்த்துக் கொள்ளப்போகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
லிபென்ஸ்டீன் சொத்துக்களை மனித அறங்காவலர் குழு நிர்வகித்து வருகின்றது.
அறங்காவலர்கள் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து பணத்தை மதிப்பை உயர செய்கிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்ததை விட நாயின் சொத்து மதிப்பு 400 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அண்மையில் கூட பிரபல பாடகி மடோனாவுக்கு சொந்தமான 29 மில்லியன் டாலர் மதிப்புள்ள மாளிகையை நாய்க்காக வாங்கியுள்ளனர்.
தற்போது, குந்தர் இத்தாலியின் டஸ்கனியில் வசித்து வருகின்றது. தனது ஓட்டுநர் இயக்கும் Convertable BMWல், இத்தாலியின் டஸ்கன் கிராமப்புறங்களை சுற்றிப் பார்ப்பது அந்த நாயிற்கு மிகவும் பிடிக்குமாம்.
manithan
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments